வாழ்நாள் கல்வி

தக்காளி சாகுபடி

தக்காளி சாகுபடி

தக்காளி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


தக்காளி அறிமுகம்

தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இதுபோல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்.

பயிரிட உகந்த மாவட்டங்கள்:

கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை.

 

தக்காளி இரகம்

பி.கே.எம்-1, கே.பி.ஹெச்-1, கோ.பி.ஹெச்-2, யு.எஸ்.-618, ருச்சி, லட்சுமி ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

பருவம்

பிப்ரவரி,மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.

வயது

145 - 150 நாட்கள்.

 

தக்காளி மண்வளம்

ஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம்.

 

 

தக்காளி விதை

விதை அளவு:

நாட்டு ரக விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 400 கிராமும், வீரிய ஓட்டு ரக விதையாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 150 கிராமும் இட வேண்டும்.

விதை நேர்த்தி:

விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க வேண்டும். விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், 1 கிலோ விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு முன் 400 கிராம் விதையுடன் 40 கிராம் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும். வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ. வரிசை இடைவெளியில் விதைத்து மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.

 

தக்காளி நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். பின்பு பார்கள் அனைத்து 25 நாள் வயதுடைய நாற்றுக்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் நடவேண்டும். நடுவதற்குமுன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிர்லா தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

உழவு முறை

நிலத்தை நன்கு உழுது பயன்படுத்திவிட்டு 60 செ.மீ, இடைவெளியில் பார்கள் அமைத்து 25 நாள் வயதுடைய நாற்றுகளை பயிரின் ஒரு பக்கத்தில் நடவேண்டும். நடுவதற்கு முன்னர் இரண்டு கிலோ அசோஸ் பைரில்லம், நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்துவிட வேண்டும். நட்ட  உடன் முதல் தண்ணீரும், பிறகு 3 வது நாள் உயிர் தண்ணீரும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாசனம் செய்யவேண்டும். அதற்கு பின்னர் தேவைப்படும் போது நீர் பாய்ச்சினால் போதுமானது.

 

தக்காளி நடவு வயல்

சரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும். பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம். நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும். 60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும். பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும். தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.

 

தக்காளி உர அளவு

மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிடுதல் வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து நீர் வழி உரமிடுதல் மூலம் மகசூலை இரட்டிப்பு செய்ய முடியும். நடவு செய்த 30ஆவது நாளும், நன்றாகப் பூத்திருக்கும் நிலையிலும் 1.25 மில்லி கிராம் என்ற அளவில் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

துல்லிய பண்ணையத்தில் வீரிய ஒட்டு ரகங்களை நடவு செய்தால் ஏக்கருக்கு 150 டன்கள் வரை பெற முடியும். நடவு செய்த 9 மாதம் வரை அறுவடை செய்யலாம். பச்சைக் காய்ப்புழு, புகையிலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பசல்சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட், 50 கிலோ, ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். நாற்று நட்ட 15 நாள் டிரைகான்டினால் 1 மிலிக்கு 1 லிட்டர் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்இவ்வாறு தெளிப்பதால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.

பின்செய் நேர்த்தி

நாற்று நடுவதற்கு முன்னர் ஒரு புளோகுளோரலின், மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து தெளிக்கவேண்டும். பின்னர் நீர் பாய்ச்சி நாற்றுகளை நடவேண்டும். நாற்று நட்ட 30நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.   காய்புழு மற்றும் புரோட்டினியா புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிபொறியைஎக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும்.

புழுக்கள் தாக்கப்பட்ட பழங்களையும், வளர்ந்த புழுக்களையும் உடனே அழித்துவிடவேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில், 2 மிலி எக்காலக்ஸ் மருந்தை கலந்து தெளிக்கவேண்டும். ட்ரைகோடெர்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் இடவேண்டும்.

கோடை உழவு:

கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்தியும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். டிரைகோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் விட வேண்டும். குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட வாளிப்பான நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப்  பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

 

தக்காளி நோய்

நோய்

புள்ளியிட்ட அழுகல் வைரஸ்:

10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.

நாற்று அழுகல் நோய்:  

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம்டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து விதை செய்நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். நாற்றங்காலில் நீர் தேங்கக்கூடாது. ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர், ஆக்சிகுளோரைடு கலந்து பாத்திகளில் ஊற்றவேண்டும்.    இலைச்சுருட்டு நச்சுயிரியை  நோயைக் கட்டுப்படுத்த டைமீத்தோவேட் மருந்தினை 2 மில்லி / லிட்டர் என்ற விதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்:

இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில் காலங்களில்  மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

இலைப்பேன்கள் :

இது தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ​ 7 கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும்.

இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு

    சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.

    20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.

    25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.

    பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம்.

    பூ உதிர்தலை குறைக்க சூளைச் சாம்பல் தோட்டத்தைச்சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

    செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டதததைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

    காய் துளைப்பானை தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.

    பென்சோயின் கொண்டு பூக்கும் போது காலை, மாலை வேளைகளில் புகை மூட்டினால் காய் துளைப்பான் மற்றும் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

    வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.

    காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுப்படும்.

    அனைத்து வித பூச்சிகளையும் கட்டுப்படுத்த 1 1/2 கிலோ சாம்பலை சாணியுடன் கலந்து தெளித்தல் வேண்டும்.

    சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

 

 

தக்காளி அறுவடை

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும். பொதுவாக 1 ஏக்கருக்கு ​15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு​ 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.

பழங்களை அறுவடை செய்த பிறகு அவற்றை தரம் பிரித்து பிளாஸ்டிக் கிரேடுகளில் நிரப்ப வேண்டும். பழங்களின் எடை ஒவ்வொரு ரகத்துக்கு மாறுபடும். எனவே, பழங்களை அளவு அடிப்படையில் விற்பனை செய்யக் கூடாது. எடை அடிப்படையில் விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும்