வாழ்நாள் கல்வி

சுரைக்காய்

சுரைக்காய்

சுரைக்காய்

Facebook twitter googleplus pinterest LinkedIn


சுரைக்காய் நடவு வயல் தயார் செய்தல்

நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஓரு முறையும், பின் சட்டிக்கலப்பை கொண்டு ஓரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன்கள் தொழுவுரம் மற்றும்; சூப்பர் பாஸ்பேட் 470 கிலோ ஓரு ஏக்கருக்கு என்ற அளவில்  இடவேண்டும். மேலும் அடியுரமாக அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா இரண்டும் ஓரு ஏக்கருக்கு தலா 2 கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ ஆகியவற்றை 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இடவேண்டும். அகலப்பாத்திகளை 4 அடி அகலம் மற்றும் 1 அடி உயரத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பின் பக்கவாட்டுக் குழாய்களுக்கு இணையாக மூன்று அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்.

 

சுரைக்காய் விதை நேர்த்தி

ஓரு ஏக்கருக்கு சுமார் 3 கிலோ விதைகள் போதுமானது. ஓரு கிலோ விதைக்கு 500 கிராம் அசோஸ்பைரில்லம் என்ற அளவில் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதைப்பதற்கு முன் ஓரு கிலோ விதைக்கு திரம் 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 

சுரைக்காய் நாற்றங்கால் தயாரிப்பு

நிழல் குடியிலிருந்து பெறப்பட்ட 15 நாட்கள் வயதுடைய ஆரோக்கியமான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்த வேண்டும். நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும். நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை ஊடகமாக பயன்படுத்த வேண்டும். நாற்றுக்களை பாலிதீன் பைகளிலும் வளர்க்கலாம். ஓரு குழிக்கு ஓரு விதை என்ற கணக்கில் விதைத்து தினமும் காலை,மாலை இரு வேலையும் நீர் பாய்ச்ச வேண்டும். 15 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்தலாம்.

 

சுரைக்காய் நடவு அல்லது நேரடி விதைப்பு

நடவிற்கு முன்சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நிலம் முழுவதும் சுமார் 8-12 மணி நேரங்கள் நன்கு நீரால் நனைக்க வேண்டும். பெண்டிமெத்தலின் என்ற முளைமுன் களைக்கொல்லிகளை எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். நாற்றுக்களை அல்லது விதைகளை 60 செ மீ இடைவெளியில் உள்ள துளைகளில் நட வேண்டும்.

 

சுரைக்காய் கரையும் உரப்பாசனம்

ஓரு ஏக்கருக்கு 200: 100: 100 கிலோ தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 3 நாட்கள் இடைவெளியில் உரப்பாசன முறையில் நடவு செயத மூன்றாம் நாள் முதல் பயிர்க்காலம் முழுவதும் கொடுக்க வேண்டும்.

 

சுரைக்காய் பயிர் வளர் இடைத் தொழில் நுட்பம்

நடவு செய்த பின் 2-3 முறைகள் 15 நாட்களுக்கு ஓரு முறை களையெடுக்க வேண்டும்.. மழைக்காலங்களில் குச்சிகள் மூலம் பந்தல் அமைத்து கொடிகள்  எடுத்து கட்டி பழங்கள் அழுவதையும் நேரடியாக மண்ணில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

 

சுரைக்காய் அறுவடை

 

நன்கு வளர்ச்சியடைந்த முழு அளவுடைய ஆனால் காய் முதிர்ச்சியடையும் முன்பு கையினால் அழுத்திப்பார்த்து அறுவடை செய்ய வேண்டும். இரகங்கள் அல்லது வீரிய ஓட்டு இரகங்களுக்கு ஏற்ப நடவு செய்த 50 முதல் 120 ஆம் நாள் முதல் அறுவடை செய்யப்படும். ஓரு ஏக்கருக்கு 25 முதல் 30 டன்கள் மகசூல் பெறலாம்.