வாழ்நாள் கல்வி

வெண்டை சாகுபடி

வெண்டைக்காய்

வெண்டை சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


வெண்டைக்காய் அறிமுகம்

தோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். இதற்கு சீசன் என்பதே இல்லை. எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு.

 

வெண்டைக்காய் மண்வளம்

மண்வளம்
வடிகால் வசதியுள்ள எல்லா வகையான  மண்களிலும் சிறப்பாக விளையும்.

 

 

வெண்டைக்காய் பருவம்

பருவம்
ஆண்டு முழுவதும் வெண்டை சாகுபடி செய்யலாம். ஆனால் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்தால், ஆவணி, புரட்டாசி மாதங்களில் காய்ப்புக்கு வரும்போது பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் அதிகம். இதனால் விற்பனை வாய்ப்பு சிறப்பாக இருக்கும், அதிக விலையும் கிடைக்கும்.

 

 

வெண்டைக்காய் தட்பவெப்பநிலை

தட்பவெப்பநிலை
வெண்டை பயிரானது வெப்பத்தை விரும்பும் பயிராகும். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்கு தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர்காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.

 

 

வெண்டைக்காய் இரகங்கள்

இரகங்கள்
கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.

 

 

வெண்டைக்காய் விதையளவு

ஏக்கருக்கு 7.5 கிலோ தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.

 

வெண்டைக்காய் நிலம் தயாரித்தல்

மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் அமைக்க வேண்டும்.

 

வெண்டைக்காய் உழவு முறை

சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த நிலத்தினை நன்கு உழுது ஏக்கருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 10 டன் இட்டு மீண்டும் இயற்கை உரம் மண்ணோடு நன்றாக கலக்கும்படி உழவேண்டும். பிறகு நிலத்தில் 60 செ.மீ. இடைவெளி கொடுத்து பார்சால் அமைக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த ரகங்களின் விதையை பாரில் விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளியில் குழிக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகள் விதைக்க வேண்டும். விதைத்த பின் எம்.என். மிக்சர் 5 கிலோவை மணலுடன் கலந்து ஒரே சீராக இடவேண்டும். உடனே பாசனம் செய்ய வேண்டும்.

 

வெண்டைக்காய் விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்

விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசி கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும்.

பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.

 

வெண்டைக்காய் நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

 

வெண்டைக்காய் உரமிடுதல்

அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து இடவேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.

இலைவழி ஊட்டம்
ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60 ஆவது நாளில் தெளிப்பதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தலாம்.

 

வெண்டைக்காய் களை நிர்வாகம்

களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் ஹெக்டேருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு விதைத்த 30ஆம் நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

 

 

வெண்டைக்காய் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்

1. செடி முளைத்து மூன்று இலை பருவத்தை அடைந்தவுடன் ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் அன்னபேதி உப்பு மற்றும் 20 கிராம் யூரியா இவைகளை கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
2. வளர்ச்சி காலத்தில் மூன்று களையெடுக்க வேண்டும்.
3. இரண்டாவது களையெடுக்கும் சமயம் ஏக்கருக்கு ஒரு மூடை டி.ஏ.பி.,ஒரு மூடை பொட்டாஷ் இட்டு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
4. செடி முளைத்து வரும்போது அதாவது செடியின் வயது 25 நாட்கள் இருக்கும்போது கான்பிடார் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் தெளித்துவிட வேண்டும்.
5. இந்த மருந்தின் காரம் நீண்டநாள் இருக்குமாதலால் விதை விதைத்து சுமார் 70 நாட்கள் மங்சள் நோய் வராமல் தடுக்கும். கான்பிடார் மருந்தினை ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.
6. நிலத்தில் 35வது நாளிலிருந்து காய்கள் காய்க்கத் துவங்கும். செடியின் வயது 25 நாட்களாக இருந்தபோதும் கான்பிடார் காரம் விஷம் இருக்காது.
7. சாம்பல் நோய் லேசாக தலைகாட்டும். உடனே ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் நனையும் கந்தகம் கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும்.
8. வெண்டை செடிகள் அதிக அளவு உஷ்ணத்தால் அடிபடாமல் இருக்க வெண்டை செடிகளைச் சுற்றி கொத்தவரை செடிகளை வளர்க்கலாம். இதற்கு பூஸா நௌபஹார் ரகத்தை இடலாம்.
9. வெண்டை சாகுபடி செய்த நிலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் மரக்குச்சிகளை ஒரு அடி இடைவெளியில் நட்டுவிட வேண்டும்.
10. வயலினுள் வெண்டையை விதைக்கும்போது ஏற்கனவே நட்ட குச்சிகள் அடிப்பாகத்தில் குழியெடுத்து குழிக்கு இரண்டு விதை வீதம் கொத்தவரை விதையை விதைக்கலாம்.
11. கொத்தவரை செடிகள் வளர்ந்த மேல் கொத்தவரை செடிகளை குச்சியோடு சேர்த்து கட்டவேண்டும்.
12. கொத்தவரை செடிகள் வெண்டை செடிகள் வேர்களில் உஷ்ணக்காற்றின் பாதிப்பு இல்லாமல் கவனித்துக் கொள்கிறது. கொத்தவரை சாகுபடியில் ஒரு ஏக்கரில் ரூ.2,000 வருமானம் கிடைக்கிறது.
13. வெண்டைக்கு கற்பூரகரைசல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சி தாக்குதலில் இருந்து முற்றிலும் பாதுகாக்கலாம்.
14. வெண்டை செடிக்கு வாரம் ஒரு முறை ஜீவாம்ருதம் ூ பழ கரைசல் தொழு உரத்தில் கலந்து ஈரம் இருக்கும் போது இட வேண்டும். வேப்பெண்ணெய் ூ கோமியம், கத்தாழைச் சாறு கலந்து வாரம் ஒரு முறை கட்டாயம் தெளிக்க வேண்டும். பழகரைசல் செடிகளின் மேல் தெளிக்கலாம்.
15. வெண்டை செடி பூக்கள் வைக்க ஆரம்பிக்கும் பொழுது தேங்காய் பால் கரைசல் வாரம் ஒரு முறை தெளிக்கவேண்டும். இதனை தொடர்ந்து கொடுப்பதன் மூலம் நீண்ட கவர்ச்சியான காய்களை பெறலாம்.
16. வெண்டையை அதிகம் தாக்கும் ஈக்களை, மஞ்சள் வண்ணம் பூசிய அட்டைகளில் கிரீஸ் தடவி வைப்பதன் மூலம் பச்சை மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
 
காய்த்துளைப்பான்: 
வெண்டையில் காய்த் துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிடவேண்டும். ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோ கிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.
கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
 
சாம்பல் நிற வண்டு
இதைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இடவேண்டும்.
நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து 1 கிலோ இடவேண்டும்.
 
அசுவினிப்பூச்சி
இதைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
 
சாம்பல் நோய்
இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்கவேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
 

வெண்டைக்காய் அறுவடை

நடவு செய்த 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விடவேண்டும். 2 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது அவசியம்.

 

வெண்டைக்காய் மகசூல்

ஏக்கருக்கு 90 முதல் 100 நாள்களில் 12 முதல் 15 டன் வரை காய்கள் கிடைக்கும்.

 

 

இயற்கை முறையில் வெண்டிக்காய் சாகுபடி

                         அவரை சாகுபடி

அவரை  இரகங்கள்

குற்றுச்செடி வகை : 

  1. கோ 6, கோ 7, கோ 8, கோ 9, கோ 10, கோ 11, கோ 12, கோ 13, கோ (ஜிபி) 14, அர்கா ஜாய் மற்றும் அர்கா விஜய்.

பந்தல் வகை : 

  1. கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ 5 மற்றும் பூசாஎர்லி.

 

மண் : 

  1. வடிகால் வசதியுள்ள இரும் பொறை மண் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 – 8.5 இருத்தல்வேண்டும்.

 

நிலம் தயாரித்தல்

  • நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்தவேண்டும்.
  • குற்று வகைகளுக்கு 60 x 30 செ.மீ அளவில் பார்கள் எடுக்கவேண்டும்.
  • பந்தல் வகைகளுக்கு 30 செ.மீ அளவில் நீளம் அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுத்து மேல் மண் மற்றும் தொழு உரம் இட்டு, ஒரு வாரம் ஆறப்போடவேண்டும்.

               விதையும் விதைப்பும்

விதையளவு :

குற்றுச்செடி வகைகளுக்கு : 

  • எக்டருக்கு : 25 கிலோ

 

பந்தல் வகைகளுக்கு : 

  • எக்டருக்கு : 5 கிலோ

 

 

 

 

விதை நேர்த்தி :

  • ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை மூன்று பொட்டலம் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்துடன் சிறிது அளவு அரிசிக் கஞ்சி சேர்த்து நன்கு கலக்கி நிழலில் அரைமணி நேரம் உலர்த்தி பின்னர் விதைக்கவேண்டும்.

 

விதைத்தல் : 

  • குற்று வகைகளுக்கு ஒரு விதையை பார்களின் ஒரு புறமாக 2-3 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்றவேண்டும்.
  • பந்தல் வகைகளுக்கு ஒரு குழிக்கு 2-3 விதைகளை ஊன்றவேண்டும்.
  • இடைவெளி 2 x 3 செ.மீ அளவில் கொடுக்கவேண்டும். கோ 1 இரக அவரைக்கு இடைவெளி போதுமானதாகும்.

நீர் நிர்வாகம்

நீர் பாய்ச்சுதல் : 

  • விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாள்
  • உயிர் தண்ணீரும் பாய்ச்சவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

பின்செய் நேர்த்தி : 

  • கொடிகள் உருவாகியுடன், ஆறு அடி உயரத்தில் பந்தல் அமைத்து பந்தலில் கொடிகளை எடுத்துக் கட்டி படரவிடவேண்டும்.
  • தேவைப்படும் போது களைக்கொத்து கொண்டு கொத்தி களை எடுக்கவேண்டும்.

உரமிடுதல்

பந்தல் வகைகளுக்கு : 

  • நிலம் தயாரிக்கும் போது எக்டருக்கு 20 டன் (குழி ஒன்றுக்கு 10 கிலோ) நன்கு மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் பொது இட்டு உழவேண்டும்.
  • அடியுரமாக குழி ஒன்றுக்கு 6:12:12 (தழை:மணி:சாம்பல்) கலப்பு உரம் 100 கிராம் இடவேண்டும். விதைக்கும் போது எக்டருக்கு 2 கிலோ அசோபைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் இடவேண்டும்.
  • விதைத்த 30 நாட்கள் கழித்து குழி ஒன்றுக்கு 10 கிராம் தழைச்சத்து இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

  • சாறு உறிஞ்சும் அசுவினி முதலான பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு மில்லி மாலத்தியான் அல்லது டைமெத்தியோட் அல்லது மீதைல் டெமட்டான் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.

 

சாம்பல் நோய் : 

  • இந்நோயைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

பந்தல் வகை : 

  • எக்டருக்கு 240 நாட்களில் 12-13 டன்கள்

குற்றுவகை :

  • எக்டருக்கு 120 நாட்களில் 8-10 டன்கள்.

காய்ப்புழு :

  • காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த கார்பைரல் 2 கிராம் / தண்ணீரில் கலந்து மூன்று முறை 15 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும் (அ) எண்டோசல்பான் 2 மிலி / லிட்டர் கலந்து தெளிக்கவேண்டும்.

 

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பலகலை கழகம்

 

 

 

பப்பாளி சாகுபடி

  • பப்பாளி ஒரு பழம் தரும் மரமாகும்.
  • இதற்கு பறங்கிப்பழம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.
  • பப்பாளியின் தாயகம் மெக்சிக்கோவாகும்.
  • தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் பப்பாளி அதிகமாக விளைகிறது.

எப்படி பயிரிடுவது…?

  • கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7, கூர்க்கனிடியூ மற்றும் சூரியா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் நடவிற்கு மிகவும் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.
  • பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூமி சாகுபடி செய்ய ஏற்றதல்ல.
  • ஒரு எக்டருக்கு நடவு செய்ய 500 கிராம் விதைகள் தேவைப்படும்.
  • நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். பிறகு பைகளை நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.
  • நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்ய வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழத்தில் குழிகள் எடுக்கவேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் இட்டு நீர் ஊற்றி ஆற விட வேண்டும்.
  • தயார் செய்துள்ள குழிகளில் நாற்றுகளை மையப்பகுதியில் நட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, ஒரு ஏக்கருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை கொடுக்க வேண்டும்.
  • நட்ட 20 நாட்களில் களை எடுக்க வேண்டும். செடிகளைச் சுற்றி களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். களை எடுத்தப் பின் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நன்கு திரண்ட பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக மாறும் போது அறுவடை செய்யவேண்டும்.
  • மகசூலானது இரகங்களை பொறுத்து வேறுபடும். கோ.2 இரகமாக இருந்தால் எக்டருக்கு 250 டன்களும், கோ. 3 இரகத்தில் 120 டன்களும், கோ.5 இரகத்தில் 250 டன்களும், கோ.8 இரகத்தில் 160 டன்களும், கோ.7 இரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும்.

 

 

பயன்கள்

  • பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமடையும்.
  • பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
  • பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி, விஷம் இறங்கும்.

 

நன்றி: Agriculture Trip

 

வெண்டைக்காய் சாகுபடி

இரகங்கள் : 

  • கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.

 

மண் மற்றும் தட்பவெப்பநிலை : 

  • வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை.
  • பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும்.
  •  குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.
  • வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம்.
  • நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.

பருவம் : 

  • ஜீன் – ஆகஸ்ட்  மற்றும் பிப்ரவரி – மார்ச்

விதையும் விதைப்பும்

விதையளவு :

  • க்டருக்கு 7.5 கிலோ

 

நிலம் தயாரித்தல் :

  • மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும்.
  • கடைசி உழவிற்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.

விதை நேர்த்தி மற்றும் விதைத்தல் : 

  • விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும்.
  • பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும்.
  • நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும்.
  • பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும்.
  • இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு வின் 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.

நீர் நிர்வாகம்

  • நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் : 

  • அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும்.
  • நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம்.
  • மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.

 

இலைவழி ஊட்டம் : 

  • ஒரு சத யூரியா கரைசலை விதைத்து 30 நாட்கள் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.
  •  மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30,45 மற்றும் 60வது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
  • களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

 

களை நிர்வாகம் :

  • களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் எக்டருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
  •  பிறகு விதைத்த 30ம் நாள், ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

 

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய்த்துளைப்பான் : 

  • வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
  •  இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
  • காய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.
  • எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.
  • கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில கரைத்து தெளிக்கவேண்டும்.

 

 

சாம்பல் நிற வண்டு : 

  • இதனைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து எக்டருக்கு 12 கிலோ இடவேண்டும்.

 

நூற்புழு தாக்குதலைத் தடுக்க : 

 

  • எக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு எக்டருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.

 

அசுவினிப்பூச்சி : 

  • இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

நோய்கள்

மஞ்சள் நரம்புத் தேமல் நோய் : 

  • இது மிகவும் அதிக அளவில் வெண்டைணைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும்.
  • இந்நோய் வெள்ளை ஈ என்ற புஸச்சகளால்ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது.
  • இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.
  • இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.
  • கோடைக்காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும்.
  • இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரப்கூடிய பார்பானி கிராந்தி போன்ற இரகங்களைப் பயிரிடுவது நல்லது.
  • மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய இரகங்காளன பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.

 

சாம்பல் நோய் : 

  • இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்கவேண்டும்.
  • பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
  •  பிறகு இடைவெளியில் மறுபடியும்  ஒரு மறை தெளிக்கவெண்டும்.

 

அறுவடை

  • நட்ட 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.
  • காய்கள் முற்றவதற்கு முன் அறவடை  செய்து விடவேண்டும். 1 முதல் 2 நாட்களுக்கு ஒரு முறை அறவடை செய்வது முக்கியமாகும்.

 

மகசூல் :

  • எக்டருக்கு 90 முதல் 100 நாட்களில் 12-15 டன் காய்கள் கிடைக்கும்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்

                          தக்காளி சாகுபடி

 

  • தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.
  • நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது.
  • மண்ணில் கார அமில தன்மை 6.0 - 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும்.
  • வெப்பநிலை 21 முதல் 24 செ.கி., வரை இருப்பது வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஜூன் - ஜூலை, நவம்பர் - டிசம்பர், பிப்ரவரி - மார்ச் ஆகிய மாதங்கள் விதைக்கும் காலம்.
  • எக்டேருக்கு 350 முதல் 400 கிராம் விதைகள் தேவை.

    விதை நேர்த்தி: 
  • ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை 40 கிராம் 'அசோஸ்பைரில்லம்' கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • அதை ஒரு மீட்டர் அகலம் உள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ., வரிசை இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • பின் மணல் கொண்டு மூடி விட வேண்டும்.

    நிலம் தயாரித்தல்: 
  • நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின் பார்கள் அமைத்து 25 நாள் வயதுள்ள நாற்றுக்களை பார்களின் ஒரு பக்கத்தில் நட வேண்டும்.
  •  நடுவதற்கு முன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

    தக்காளி ரகங்கள்: 
  • கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பி.கே.எம். 1, பூசாரூபி, பையூர் 1, சி.ஓ.எல்.சி.ஆர்.எச். 3, அர்கா அப்ஜித், அர்கா அஹா, அர்கா அனான்யா ஆகிய ரகங்கள் உள்ளன.
  • இவற்றை விதையின் ரகங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

    நீர் நிர்வாகம்: 
  • நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  •  பின் மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

     

ஊட்டச்சத்து மேலாண்மை: 

  • அடியுரமாக எக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோ இட வேண்டும்.
  •  நட்ட 30ம் நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும். நாற்று நட்ட 15ம் நாள் மற்றும் பூக்கும் தருணத்தில் 'டிரைகோன்டால்' 1 பி.பி.எம். என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • இதனால் மகசூல் அதிகரிக்கும்.

    பயிர் பாதுகாப்பு:
  •  காய்ப்புழு, புரோடீனியா புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி எக்டேருக்கு 12 எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.
  • தாக்கப்பட்ட பழங்களில், வளர்ந்த புழுக்களை அழிக்க வேண்டும்.
  •  'டிரைகோகிரம்மா' என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டேருக்கு 50 ஆயிரம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதார சேதநிலை அறிந்து விட வேண்டும்.
  • காய்ப்புழுவிற்கு என்.பி.வி. வைரஸ் கலவை தெளிக்க வேண்டும்.
  • புரோடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.
  • 'கார்போபியூரான்' குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இட வேண்டும்.
  • ஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து நாற்று நடுவதற்கு முன் நிலத்தில் தெளித்து நீர்ப்பாய்ச்சி பின் நாற்றுக்களை நட வேண்டம்.
  • நாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்கிளை எடுக்க வேண்டும்.
  • விதை, நிலம் தயாரித்தல், நீர் நிர்வாகம், ஊட்டச்சத்து, களை கட்டுப்பாடு, பயிர் பாதுகாப்பு, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றினால் 135 நாட்களில் ஒரு எக்டேருக்கு 35 டன் பழங்கள் கிடைப்பது உறுதி.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை.