வரகு சாகுபடி
வரகு அறிமுகம்
இன்றை இந்திய திருநாட்டில் சிறுதானியப்பயிர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதிகமான விலையும் இந்த சிறு தானியப்பயிர்களுக்கு உண்டு. இவற்றில் குறிப்பாக வரகு பயிர்க்கு அதிக விலையும் உண்டு. வரகு மருத்துவ பயிர்களாகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காவும் பயிரிடப்பட்டு வருகின்றன. இது மிக குறைந்த அளவு நீர் தேவை உள்ள பயிர். இந்த சிறுதானியப்பயிர்கள், மானாவாரி பயிர்களாகவும், தோட்டக்கால் பயிர்களாகவும் இன்று அதிகமாக பயிர் செய்யப்பட்டு வருகின்றது.
வரகு ரகங்கள்
கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்ட கோ2, மற்றும் கோ3 மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
வரகு வயது
கோ2 ரகப்பயிருக்கு வயது 135 நாட்கள் ஆகும்.
கோ3 ரகப்பயிருக்கு வயது 115 நாட்கள் ஆகும்.
வரகு பருவம்
ஜீன் - ஜீலை முதல் செப்படம்பர் மற்றும் அக்டோபர் வரை பயிர் செய்யலாம்.
வரகு விதையளவு
ஏக்கருக்கு 1 வரிசை நடவென்றால் 4 கிலோ விதை போதுமானது, விதைத்தால் 5 கிலோ அளவு விதை தேவைப்படும்.
விதைத்தல்
இயந்திரம் மூலம் சிறு தானியப் பயிர்களை விதைப்பதால் அதிகமான இடங்களில் பயிர் செய்யலாம். கொள்ளு அல்லது விதைப்பான் உபயோகித்து விதைத்தால் அதிகப்பரப்பளவில் விதைக்கலாம். மற்றும் மண் ஈரம் காக்கப்படும்.
விதைநேர்த்தி
ஓரு கிலோ விதைக்கு 2 கிராம் அக்ராசன் மருந்து கலந்து பின்பு விதைகளை அவற்றில் ஊறவிட்டு பின்பு விதைக்கலாம், அல்லது மாட்டு சிறுநீர் கலந்து விதை நோர்த்தி செய்து பின்பு விதைக்கலாம். ரைசோபியம், அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களில் கலந்து பின்பு விதைக்கலாம்.
வரகு நிலம் தாயரித்தல்
இரண்டு முதல் மூன்று தடைவ நாட்டுக் கலப்பை அல்லது சிறு இரும்பு கலப்பையால் உழவும் பின்பு நிலத்தை சமப்படுத்தி பின்பு விதைக்கலாம். வரகு சாகுபடிக்கு முன்பு நிலத்தை கோடை உழவு ஓரு செய்திருத்தல் நன்று.
வரகு நீர்பாசனம்
நட்ட முதல் 3 வது நாள் உயிர்நீரும் அதை தொடர்ந்து வாரத்திற்கு இரு முறை நீர்பாசனம் செய்ய வேண்டும்.
வரகு உரமிடுதல்
தொழு உரம் அல்லது கம்போஸ்ட் (அடியுரம் ஏக்கருக்கு) 5 டன், தழைச்சத்து 18 கிலோ, மணிச்சத்து 9 கிலோ, சாம்பல் சத்து 5 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
வரகு இடைவெளி
1 வரிசை நடவு 25 செ.மீ X 10 செமீ என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 10 செமீ என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வரகு களையெடுத்தல்
களைக்கொத்து ,தந்துலு அல்லது கைரோட்டரி கல்டிவேட்டர் மூலம் செடிகளுக்கு பக்க விளைவுகள் இல்லாமல் களைகளை எடுத்து அகற்றவும். முதல் களை 15 வது நாளிலும் இரண்டாவுது களை 40 வது நாளிலும் எடுக்க வேண்டும். களைகள் எடுப்பதன் மூலமாக மண் ஈரம் ஓரளவு நிலத்தில் நிலை நிறுத்தப்படும். களை யெடுத்து ஓரு முறை இயற்கை உரமான, வேப்பம் புண்ணாக்கு இடுவதால் மண்ணில் உள்ள கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
பயிர் களைதல்
முதல் களை எடுத்ததும் பயிரைக் களைதல் வேண்டும் அப்படி இல்லையெனில் விதைத்த 20 நாட்களுக்குள் களை எடுத்தல் வேண்டும். பயிர் கதிர் விடும் வரை மூன்று முறை களையெடுத்தல் நன்று.
வரகு பயிர் பாதுகாப்பு
பூச்சி மற்றும் பூஞ்சானங்கள் இந்த பயிரை அதிகளவு தாக்குவதில்லை. ஓரு சில பூச்சிகள் தாக்கினால் அவற்றிற்கு வேப்பங்கொட்டை சாறு கலந்த நீரை தெளித்தால் உடனே பூச்சி தொல்லை குறைந்து விடும்.
வரகு அறுவடை
பயிர் நன்றாக விளைந்து 115 நாட்களில் காய்ந்த நிலையில் காணப்படும். நல்ல முற்றிய திரட்ச்சியான காய்கள் வந்த பிறகு தானியங்களை அறுவடை செய்து பின்பு பினையில் அடித்து அல்லது இயந்திரத்தில் அடித்து காயவைத்து பின்பு மூடைகளாக கட்டி விற்பனைக்கும், உணவுக்கும் பயன்படுத்தலாம்.